நீலகிரி

மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட சிறப்பு முகாம்

29th Aug 2019 07:22 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்திலுள்ள 6 வட்டங்களிலும் அம்மா திட்ட சிறப்பு முகாம் இம்மாதம் 30ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
உதகை வட்டம்- கடநாடு கிராமத்திலுள்ள சமுதாயக் கூடத்திலும்,  குன்னூர் வட்டம்- கேத்தி கிராமத்திலுள்ள கீழ் ஒடயரட்டி சமுதாயக் கூடத்திலும்,  கோத்தகிரி வட்டம்- அல்லிமாயார் சமுதாயக் கூடத்திலும் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
குந்தா வட்டம்- இத்தலார் கிராமத்திலுள்ள பெம்பட்டி சமுதாயக் கூடத்திலும்,  கூடலூர் வட்டம்- செருமுள்ளி கிராமத்திலுள்ள தேவன் அரசு நடுநிலைப் பள்ளியிலும், பந்தலூர் வட்டம்-  சேரங்கோடு கிராமத்திலுள்ள அய்யன்கொல்லி அரசு உண்டு உறைவிடப் பள்ளி வளாகத்திலும் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்தச் சிறப்பு முகாம்களில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தவறாமல் பங்கேற்று தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். 
இத்தகவலை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT