நீலகிரி

சிறுசேமிப்புத் திட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

23rd Aug 2019 09:33 AM

ADVERTISEMENT

கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறு சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அஞ்சல் அலுவலகம் சார்பில் நடைபெற்ற சிறுசேமிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அய்யப்பன் தலைமை வகித்தார். 
அஞ்சல் அலுவலர் புவனேஸ்வரன் அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டம் குறித்தும் அதன் அவசியம் குறித்தும் விளக்கமளித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT