கூடலூரை அடுத்துள்ள மச்சிக்கொல்லி பகுதியில் மழையால் சேதமடைந்த சாலையை கிராம மக்களே சீரமைக்கும் பணியை சனிக்கிழமை துவங்கினர்.
கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சியிலுள்ள மச்சிக்கொல்லி- பேபிநகர் சாலையை கடந்த பத்து நாள்களாகப் பெய்த கனமழையால் சேதமடைந்துவிட்டது.
ஏற்கெனவே இந்தச் சாலையைச் சீரமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் சீரமைக்கப்படவில்லை. இச்சாலை மழையால் மிகவும் மோசமாக சிதிலம் அடைந்துவிட்டது.
எனவே அப்பகுதி மக்களே களமிறங்கி சாலையில் உள்ள குழிகளில் கற்களால் மூடி மண் நிரப்பி, சீரமைத்து வருகின்றனர்.