நீலகிரி

மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில்  சுதந்திர தின விழா கொண்டாட்டம்

16th Aug 2019 06:51 AM

ADVERTISEMENT

உதகையில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி அலுவலகமான காமராஜர் பவனில் சுதந்திர தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கட்சியின் மாவட்டத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநில செயலர் எச்.டி.போஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சுஞ்சையா தேசியக் கொடியேற்றினார்.  தொடர்ந்து அக்கட்சியின் அலுவலகத்தில் உள்ள காந்தி, காமராஜர் புனித  அஸ்திக் கலசங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மதச்சார்பின்மையையும், சமூக நீதியையும் காப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில்  மாவட்டச் செயலர் ராஜரத்தினம், வழக்குரைஞர் ஹரிஹரன்,  வட்டாரத் தலைவர் மடியன்,  நகரத் தலைவர் முஸ்தபா, துணைத் தலைவர் ஜாபர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
அதேபோல, குன்னூரில் உள்ள கட்சி அலுவலகத்திலும் சுதந்திர தின விழா நகரத் தலைவர் சாந்திலால்  தலைமையில் கொண்டாடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT