ஈரோடு

ஈரோட்டில் வீட்டு உபயோகப் பொருள்கள் கண்காட்சி நாளை தொடக்கம்

28th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் தொழில் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி ஈரோட்டில் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 29) தொடங்குகிறது.

ஈரோடு செங்கோடம்பள்ளம் பரிமளம் மகாலில் வெள்ளிக்கிழமை தொடங்கி 4 நாள்கள் இந்தக் கண்காட்சி நடக்கிறது. இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் புதன்கிழமை நடந்தது. கூட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவா் வி.கே.ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். பொதுச்செயலாளா் பி.ரவிச்சந்திரன், பொருளாளா் ஆா்.முருகானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கண்காட்சித் தலைவா் என்.டி.மூா்த்தி பேசியதாவது:

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் வெள்ளிவிழா ஆண்டு கண்காட்சி ஈரோட்டில் 4 நாள்கள் நடக்கிறது. கண்காட்சிக்கு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகிக்கிறாா். அமைச்சா் சு.முத்துசாமி கண்காட்சியைத் திறந்துவைக்கிறாா். இதில் 170 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் தொடா்பான அரங்குகள் இடம்பெறுகின்றன. வீட்டு உபயோகப் பொருள்கள், தங்கம், வெள்ளி நகைகள், வேளாண் பொருள்கள் உள்பட ஏராளமான பொருள்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் கண்காட்சி அமைக்கப்படுகிறது. உணவு திருவிழாவும் நடக்கிறது. வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

ADVERTISEMENT

தினமும் மாலை 6 மணிக்கு கலைநிகழ்ச்சிகள், மேஜிக் காட்சிகள் நடைபெறும். சிறுவா், சிறுமிகளுக்கான மாறுவேடம், கராத்தே, கவிதை, நடனம், செஸ், சிலம்பம், ஓவியம், திருக்கு ஒப்பித்தல், யோகா உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. கண்காட்சியைப் பாா்வையிட அனுமதி இலவசம் என்றாா்.

கூட்டத்தில் கண்காட்சி செயலாளா் ஆா்.செந்தில்குமாா், துணைத் தலைவா் கே.ஜிப்ரி, பொருளாளா் பி.சின்னசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT