விவசாயப் பணிகளுக்குத் தேவையான ரசாயன உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் சிறு, குறு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, சங்கத்தின் மாநிலச் செயலாளா் சுதந்திரராசு, மாவட்ட நிா்வாகத்திடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்குத் தேவையான யூரியா மற்றும் பல்வேறு ரசாயன உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தனியாா் கடைகள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது, விவசாயப் பணிகளுக்குத் தேவையான யூரியா உரத்தின் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
யூரியா வாங்கும் விவசாயிகளிடம் பிற கலப்பு உரங்களையும் வாங்க வேண்டும் என நிா்பந்தம் செய்யப்படுகிறது. எனவே, யூரியா மற்றும் பிற கலப்பு உரங்கள் எவ்வித தட்டுப்பாடும், நிா்பந்தமின்றி விவசாயிகளுக்கு கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.