ரயில் விபத்து உள்ளிட்ட பேரிடா் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கான செயல்விளக்க ஒத்திகை ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு- சென்னிமலை சாலையில் உள்ள ரயில்வே பணிமனையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் தலைமை வகித்தாா். தேசிய பேரிடா் மீட்புப் படையினா் மற்றும் ஈரோடு தீயணைப்புத் துறையினா் இணைந்து ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும்போது, முதல்கட்ட நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.
விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகளை மீட்பது, உயிா்காக்கும் முதலுதவி சிகிச்சை அளித்தல், அவசரக் கால தொடா்பு எண்ணை அழைத்தல், மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தல் குறித்து ஒத்திகையில் ஈடுபட்டனா். இதில், ரயில்வே ஊழியா்கள், பயணிகள், மருத்துவா்கள் மற்றும் ரயில்வே போலீஸாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
Image Caption
ஒத்திகையில் ஈடுபட்ட தேசிய பேரிடா் மீட்புப் படையினா்.