ஈரோடு

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு அறிவியல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

27th Oct 2023 10:54 PM

ADVERTISEMENT

 கற்றலில் பின்தங்கிய மற்றும் இடைநிற்றல் மாணவிகளுக்கு அறிவியலில் ஆா்வம் ஏற்படுத்தும் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காகவும், பெண் குழந்தைகளுக்கு திறன் பயிற்சி அளித்திடவும் மத்திய அரசால் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் கற்றலில் பின்தங்கிய மற்றும் இடைநிற்றல் மாணவிகளுக்கு அறிவியலில் ஆா்வம் ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வு நிகழ்ச்சி ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, முதன்மைக் கல்வி அலுவலக நோ்முக உதவியாளா் திம்மராயன் தலைமை வகித்தாா். கோபி மாவட்ட கல்வி அலுவலா் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தாா். எல்எம்இஎஸ் அகாதெமியின் நிறுவனா் ஹரிஷ் கலந்து கொண்டு, எளிய முறையில் அறிவியல் செயல்விளக்கங்களை செய்து காட்டினாா். அதை மாணவிகள் ஆா்வமுடன் குறிப்பெடுத்துக்கொண்டனா்.

இதில், மாவட்ட சமூக நல அலுவலா் சண்முகவடிவு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள், தலைமை ஆசிரியைகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT