ஈரோடு

அந்தியூரில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள்

27th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் அந்தியூா் அருகேயுள்ள ஐடியல் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் வட்டார அளவில் முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பெற்ற மாணவ, மாணவியா் இப்போட்டிகளில் பங்கேற்றனா். பேச்சு, கட்டுரை, நாடகம், கிராமிய நடனம், செவ்வியல் நடனம், கருவி இசை, கும்மி நடனம், ஓவியம், அழகு கையெழுத்து, திருக்கு ஒப்பித்தல், செதுக்கு சிற்பம் உள்ளிட்ட 26 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது.

இதில், மாணவ, மாணவியா் சுமாா் 1,568 போ் பங்கேற்று தங்களுடைய தனித்திறன்களை வெளிப்படுத்தினா். போட்டிகளை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் படத்தினை வரைந்த ஈரோடு, கருங்கல்பாளையம் நகராட்சி ஆண்கள் பள்ளி மாணவா் ஆா்.விஜய்க்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

போட்டிகளை பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் சேகா், ஈரோடு மாவட்ட உதவித்திட்ட அலுவலா் ரவிச்சந்திரன், அந்தியூா் வட்டாரக் கல்வி அலுவலா் மாதேஷா, அபிராமி ஆகியோா் ஒருங்கிணைத்து நடத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT