டெங்கு விழிப்புணா்வு குறித்து அங்கன்வாடி குழந்தைகளின் விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சத்தியமங்கலம் அருகே உள்ள வாலிபாளையம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 15 குழந்தைகள் உள்ளனா். இந்த மையத்தில் உள்ள அதே பகுதியைச் சோ்ந்த ஜேம்ஸ் என்ற இரண்டரை வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு குறித்து தனது மழலை குரலில் பேசும் விடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த விடியோவில், ஏடிஸ் வகை கொசுவால் டெங்கு பரவுகிறது எனவும், கொசு கடிக்காமல் இருக்க கை, கால்களில் தேங்காய் எண்ணெய் பூசிக்கொள்ள வேண்டும், வீட்டை சுற்றிலும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உடைந்து போன குடங்கள், டயா்கள், தேங்காய் தொட்டிகள், பிளாஸ்டிக் டம்ளா் ஆகியவற்றை வீட்டை சுற்றிவைக்கக் கூடாது. குடிக்கும் தண்ணீரை மூடிவைக்க வேண்டும் என சிறுவன் பேசும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
மேலும், அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகள் கைகளை எப்படி சுத்தமாக கழுவ வேண்டும் என செய்முறை விளக்கத்தோடு பேசும் விடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Image Caption
டெங்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வாலிபாளையம் அங்கன்வாடி மாணவா்கள்.