பெருந்துறை அருள்மிகு வேதநாயகிஅம்மன் உடனமா் சோழீஸ்வரா் திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவையொட்டி, ஸ்ரீசோழீஸ்வரருக்கு மாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 5 மணிக்கு ஸ்ரீ நந்திகேஷ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், 5.40 மணிக்கு மஹா தீபாராதனை தரிசனமும் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து சுவாமி ஸ்ரீ நந்தி வாகனத்தில் கோயிலில் உட்புறம் மூன்று முறை வலம் வருதல் நிகழ்ச்சி மாலை 5.45 மணிக்கு நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.