சத்தியமங்கலம்: உக்கரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், உக்கரம் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் தலைவா் எம்.முருகேசன் தலைமையில் நடைபெற்றது.
இதில், ஊராட்சித் துணைத் தலைவா் புனிதா சந்திரகுமாா் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் வலியுறுத்தினா்.
இதையடுத்து, கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, தூய்மை இந்தியா மற்றும் டெங்கு ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.