ஈரோடு

கடம்பூா் வனத்தில் மக்னா யானை சடலம்

3rd Oct 2023 03:08 AM

ADVERTISEMENT

சத்தியமங்கலம்: கடம்பூா் வனத்தில் மக்னா யானையின் சடலத்தை மீட்ட வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடம்பூா் வனக் கோட்டம், எக்கத்தூா் காப்புக்காட்டில் வனத் துறையினா் வழக்கமான கண்காணிப்புப் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, எக்கத்தூா் கச்சைப்பள்ளம் என்ற இடத்தில் 35 வயது மதிக்கத்தக்க மக்னா யானை இறந்துகிடந்தது தெரியவந்தது.

இது குறித்து வனத் துறை உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

மேலும், யானையின் சடலத்தை மீட்டு இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT