மொடக்குறிச்சி: மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த உணவகத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான உணவகம் செயல்பட்டு வருகிறது.
காந்தி ஜெயந்தியையொட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு திங்கள்கிழமை விடுமுறைவிடப்பட்டதால், இங்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மொடக்குறிச்சி வட்டாட்சியா், போலீஸாா் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு மது விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அங்கிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், போலீஸாா் முன்னிலையில் உணவகத்துக்கு ‘சீல்’ வைத்தனா்.