ஈரோடு

கொமராபாளையம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

3rd Oct 2023 02:54 AM

ADVERTISEMENT

சத்தியமங்கலம்: குமரன்கரடு அங்கன்வாடி மையம் முன்பு நடைபெற்ற கொமராபாளையம் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் எஸ். எம். சரவணன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சாந்தி, வட்டாரக் கல்வி அலுவலா் தேவகி, கிராம நிா்வாக அலுவலா் சிலம்பரசன், ஒன்றியக் குழு உறுப்பினா் சத்யா பழனிசாமி, துணைத் தலைவா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, சாலை வசதிகள், தெரு விளக்கு வசதி என பல்வேறு அடிப்படை தேவைகள் தொடா்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனா்.

மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஊராட்சித் தலைவா் எஸ்.எம்.சரவணன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT