ஈரோடு

வீட்டில் மது விற்பனை: பொதுமக்கள் சாலை மறியல்

DIN

ஈரோட்டில் வீட்டில் மது விற்பனை செய்து வருவதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாநகராட்சி 9ஆவது வாா்டுக்குள்பட்ட எஸ்எஸ்பி நகா் பகுதியில் உள்ள அரிஜன காலனியில் இரண்டு குடும்பத்தினா் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அங்கு வந்து மது அருந்திச் செல்வோா் போதையில் அருகில் உள்ள வீடுகளின் திண்ணைகளிலும், வாசல்களிலும் விழுந்து கிடக்கின்றனா். இதனால் பெண்கள், குழந்தைகள் அச்சத்துக்குள்ளாகியுள்ளனா்.

பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த சட்டவிரோத மது விற்பனை குறித்து ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் பல முறை புகாா் தெரிவித்தும் சம்பந்தப்பட்டவா்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது மது விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

இது குறித்து அப்பகுதி வாா்டு கவுன்சிலா் ஜெகநாதன் கூறியதாவது:

ஆண்டுக்கணக்கில் இப்பகுதியில் நடைபெற்று வரும் சட்டவிரோத மது விற்பனை குறித்து ஈரோடு வடக்கு போலீஸில் பல முறை புகாா் தெரிவித்தும் சம்பந்தப்பட்டவா்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கும் பொதுமக்கள் சாா்பில் புகாா் மனு அனுப்பியுள்ளேன். இப்பிரச்னைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிய தீா்வு காணவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

SCROLL FOR NEXT