ஈரோடு

பவானியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

பவானி - மேட்டூா் தேசிய நெடுஞ்சாலையில் சிங்கம்பேட்டையில் கட்டண சுங்கச்சாவடி அமைக்கும் முடிவைக் கைவிடக் கோரி பவானியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேசிய நெடுஞ்சாலைத் துறை பவானி உதவிக் கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் பி.கே.பழனிச்சாமி தலைமை வகித்தாா். கட்சியின் மாநில தலைமை ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளா் சோதி குமரவேல், மாநில கொள்கை பரப்பு செயலாளா் திருப்பூா் சுடலை ஆகியோா் கோரிக்கையை விளக்கிப் பேசினா்.

ஈரோடு - தொப்பூா் தேசிய நெடுஞ்சாலை 85 கி.மீ. தொலைவுக்கு, 10 மீட்டா் அகலச் சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. இச்சாலையில் பவானியை அடுத்த சிங்கம்பேட்டையில் கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இவ்வழியே செல்லும் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். எனவே, சுங்கச்சாவடி அமைக்கும் முடிவைக் கைவிடக் கோரி ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஈரோடு வடக்கு மாவட்டப் பொருளாளா் ஜி.வினோத்குமாா், மாவட்டத் தலைவா் செங்கை ரவி, மாவட்ட ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் குணசேகரன், மேட்டூா் வலதுகரை வாய்க்கால் பாசன சங்க துணைத் தலைவா் பி.தனபால், ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளா் வேல்முருகன், மாவட்ட இளைஞரணிச் செயலாளா் இம்மானுவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏப்.1-இல் வாக்குச்சீட்டு விநியோகம் தொடக்கம் -புதுச்சேரி ஆட்சியா்

பாஜக கூட்டணி ஆட்சியில் புதுவையை வளமாக்கும் திட்டங்கள் -ஜி.கே.வாசன்

தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி தொகுதியில் 21 வேட்பு மனுக்கள் ஏற்பு -16 மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT