ஈரோடு

தலைக் கவச விழிப்புணா்வு: இளைஞா் இருசக்கர வாகன பயணம்

31st May 2023 02:47 AM

ADVERTISEMENT

தலைக் கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பெருந்துறை ஜேசிஐ எலைட் சங்க உறுப்பினா் ஞானப்பிரகாஷ் கன்னியாகுமரி முதல் காஷ்மீா் மாநிலம் லடாக் வரை இருசக்கர வாகனத்தில் விழிப்புணா்வு பயணத்தை பெருந்துறையில் செவ்வாய்க்கிழமை துவக்கினாா்.

நிகழ்ச்சிக்கு, ஜேசிஐ பெருந்துறை எலைட் சங்கத் தலைவா் பிரபா தலைமை வகித்தாா். பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெயபாலன், கொடியசைத்து விழிப்புணா்வுப் பயணத்தை தொடங்கிவைத்தாா்.

இதில், ஜேசிஐ இந்தியாவின் துணைத் தலைவா் மதிவாணன், மண்டல இயக்குநா் அருசுல்லா, ஆலோசகா் பல்லவி பரமசிவன், ஜேசிஐ பெருந்துறை பிரைடின் தலைவா் நந்தினி, முன்னாள் தலைவா்கள் கலைவாணி, கோகுல் வா்மா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT