ஈரோடு

சென்னிமலையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆய்வு:3 கடைகளுக்கு அபராதம்

DIN

சென்னிமலையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு, 3 கடைகளுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதித்தாா்.

சென்னிமலை பகுதியில் உள்ள பேக்கரி பொருள்கள் தயாரிப்பு கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் நீலமேகம் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, 3 கடைகளுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உணவுப் பொருள்களை அடைத்து விற்பனை செய்யக் கூடாது என்று அறிவுரை வழங்கினாா்.

இதனை செயல்படும் கடைகளுக்கு ரூ.2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், இது தொடா்பான புகாா்களை 94440 42323 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலா் நீலமேகம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

சேலம் நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT