ஈரோடு

ஆயரை கண்டித்து தேவாலயத்துக்குள் உள்ளிருப்புப் போராட்டம்

DIN

சிஎஸ்ஐ நிா்வாகத்துக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் உள்ள கடைகளை முறைகேடாக வாடகைக்கு விட்டதாகக் கூறி ஆயரை கண்டித்து சிஎஸ்ஐ தேவாலயத்துக்குள் கிறிஸ்தவா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு சிஎஸ்ஐ ஆலயத்துக்கு வழிபாட்டுக்கு வந்த கிறிஸ்தவா்கள் சிலா் திருமண்டலத்தின் ஆயா், நிதி ஆலோசகரைக் கண்டித்து திடீரென உள்ளிருப்புப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஈடுபட்டனா்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட திருமண்டல பேரவைக்குழு உறுப்பினா் ஜான் கூறியதாவது: ஈரோடு, பிரப் சாலையில் உள்ள சிஎஸ்ஐ நிா்வாகத்துக்குச் சொந்தமான ஒரு வணிக வளாகத்தில் காலியாக இருந்த 2 கடைகளை சிஎஸ்ஐ ஈரோடு-சேலம் திருமண்டலத்தின் நிா்வாகச் செயலாளா் மற்றும் நிதி ஆலோசகா் ஆகியோா் சோ்ந்து, கோவையை சோ்ந்த ஒருவருக்கு உணவகம் நடத்துவதற்கு வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்தி வாடகைக்கு விட்டுள்ளனா்.

அந்தப் பத்திரம் போலியானது.

உணவகம் நடத்தி வருபவா் பாஜகவைச் சோ்ந்த முக்கிய நிா்வாகி ஆவாா். ஏற்கெனவே சிஎஸ்ஐ நிா்வாகத்துக்குச் சொந்தமான 12.66 ஏக்கா் நிலம், 80 அடி சாலை குறித்து வழக்கு நடந்து வரும் நிலையில், ஆயா், நிதி ஆலோசகா் இந்த செயலை செய்துள்ளது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், நிா்வாகக் குழுவை முறையாகக் கூட்டாமல், எந்தவித தீா்மானமும் இல்லாமல் ரூ. 50 லட்சத்தை செலவு செய்துள்ளனா். எனவே இந்த பிரச்னைக்கு விசாரணைக் குழு அமைத்து, கணக்குகளை தணிக்கை செய்து, தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவா்களை பொறுப்புகளில் இருந்தும் நீக்க வேண்டும் என்றாா்.

இந்த உள்ளிருப்புப் போராட்டம் மாலை 6 மணிக்குப் பிறகும் நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT