ஈரோடு

அந்தியூா் வாரச் சந்தையில் வணிக வளாக கட்டுமானப் பணிகள்

DIN

அந்தியூா் பேரூராட்சிக்கு உள்பட்ட வாரச்சந்தை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தின் கட்டுமானப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அந்தியூா் வாரச்சந்தையில் ரூ.5.74 கோடியில் 16 கடைகளுக்கான வணிக வளாக கட்டடங்கள், உணவு விடுதி, மாடுகள் தங்குமிடம், கழிப்பிடம், பேவா் பிளாக் சாலை, இருசக்கர வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் பாா்வையிட்டு, கட்டுமானப் பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தாா். மேலும், தரமாக பணிகளை மேற்கொள்வதோடு, குறித்த காலத்துக்குள் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

அந்தியூா் பேரூராட்சி செயல் அலுவலா் செல்வகுமாா், பேரூராட்சி துணைத் தலைவா் பழனிசாமி, திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் மு.நாகராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT