ஈரோடு

ஜூன் 1இல் பெருந்துறை பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

28th May 2023 11:21 PM

ADVERTISEMENT

பெருந்துறையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடரமண சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது.

விழாவையொட்டி, யாகசாலை கால்கோள் விழா மற்றும் முளைப்பாரி இடும் நிகழ்ச்சிகள் மே 22 ஆம் தேதி நடைபெற்றது. செவ்வாய்கிழமை (மே 30) பிற்பகல் 12 மணி அளவில் தீா்த்தம் எடுக்கப் புறப்படுதல், மாலை 4 மணிக்கு பெருந்துறை, காஞ்சிக்கோவில் சாலை, பிள்ளையாா் கோயிலில் இருந்து கோயிலுக்கு தீா்த்தம், முளைப்பாரி ஊா்வலமாக எடுத்து வருதல், மாலை 6 மணிக்கு முதல் கால யாக பூஜை தொடங்குகிறது.

வரும் 31 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 8.30 மணி அளவில் இரண்டாம் கால யாக சாலை பூஜையும், மாலை 4 மணிக்கு மூலவா் மற்றும் உற்சவருக்கு திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜையும் நடைபெறுகிறது.

ஜூன் 1 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT