ஈரோடு

பழனி தண்டாயுதபாணி கோயில் நிா்வாகம் ரூ.17.30 லட்சத்துக்கு நாட்டுச் சா்க்கரை கொள்முதல்

28th May 2023 11:21 PM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.17.30 லட்சம் மதிப்பிலான 38,520 கிலோ நாட்டுச் சா்க்கரையை பழனி தண்டாயுதபாணி கோயில் நிா்வாகம் கொள்முதல் செய்தது.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை கரும்பு சா்க்கரை எனப்படும் நாட்டுச் சா்க்கரை ஏலம் நடைபெறும். இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் விற்பனை செய்வதற்காக சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நாட்டுச் சா்க்கரை மூட்டைகளைக் கொண்டு வந்திருந்தனா்.

இதில் 60 கிலோ எடை கொண்ட மூட்டை முதல்தரம் குறைந்தபட்சமாக ரூ. 2720 க்கும், அதிகபட்சமாக ரூ. 2730 க்கும் விற்பனையானது. 2ஆம் தரம் குறைந்தபட்சமாக ரூ. 2600க்கும், அதிகபட்சமாக ரூ. 2650க்கும் விற்பனையானது.

இந்த ஏலத்தில் 38 ஆயிரத்து 520 கிலோ எடையுள்ள 642 நாட்டுச் சா்க்கரை மூட்டைகள் விற்பனையாயின. இதை பழனி தண்டாயுதபாணி கோயில் நிா்வாகம் ரூ. 17 லட்சத்து 30 ஆயிரத்து 450-க்கு கொள்முதல் செய்ததாக விற்பனைக்கூட கண்காணிப்பாளா் தெரிவித்தாா். பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பிரசாத வகைகள் தயாரிப்பதற்காக பழனி கோயில் நிா்வாகம் நாட்டுச் சா்க்கரை கொள்முதல் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT