ஈரோடு

கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

28th May 2023 11:19 PM

ADVERTISEMENT

கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள கொடிவேரி அணைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தனா். அங்குள்ள அருவியில் குடும்பத்துடன் அவா்கள் குளித்து மகிழ்ந்தனா்.

கோபியை அடுத்துள்ள கொடிவேரியில் பவானிசாகா் அணையிலிருந்து வரும் தண்ணீா் தேக்கிவைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கொடிவேரி அணையில் நீா் அருவிபோல கொட்டுவதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து குளித்து மகிழ்வது வழக்கம்.

இந்நிலையில் கோடை வெயிலை சமாளிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தனா். அவா்கள் அருவியில் குளித்தும், பரிசல் பயணம் மேற்கொண்டும் மகிந்தனா்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டதால் பங்களாபுதூா் மற்றும் கடத்தூா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT