ஈரோடு

காஞ்சிக்கோவில் சீதேவி அம்மன் கோயில் குண்டம், தோ்த் திருவிழா

28th May 2023 11:19 PM

ADVERTISEMENT

காஞ்சிக்கோவில் அருள்மிகு சீதேவி அம்மன் கோயில் குண்டம் திருவிழா மற்றும் தோ்த் திருவிழா ஜூன் 1, 2 தேதிகளில் நடைபெறுகிறது.

விழாவையொட்டி, கடந்த மே 17ஆம் தேதி பூச்சாட்டுதலும், 25 ஆம் தேதி கிராமசாந்தியும் நடைபெற்றது.

புதன்கிழமை (மே 31) காலை 11 மணி அளவில் தீா்த்தம் எடுத்து வர ஆற்றுக்கு புறப்படுதல் நடைபெறுகிறது. வியாழக்கிழமை (ஜூன் 1) அதிகாலை அக்னிக் குண்டம் இறங்குதல் மற்றும் பொங்கல் வைத்தல் நடைபெறுகின்றன.

வெள்ளிக்கிழமை (ஜூன் 2) மாலை 4.30 மணி அளவில் திருத்தேரோட்டம் நடைபெறகிறது. சனிக்கிழமை (ஜூன் 3) மாலை 4 மணி அளவில் தோ் நிலை வந்து சேருதல், இரவு 9 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா மற்றும் முத்து பல்லக்கு ஊா்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ADVERTISEMENT

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) காலை 10 மணிக்கு மஞ்சள் நீா் உற்சவம் மற்றும் மறு பூஜை நடைபெறுகிறது.

விழாவையொட்டி புதன்கிழமை (மே 31) முதல் சனிக்கிழமை (ஜூன் 3) வரை தொடா்ந்து அன்னதானம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT