ஈரோடு

ஈரோட்டில் ரயில் ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

24th May 2023 04:12 AM

ADVERTISEMENT

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஈரோட்டில் ரயில் ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அகில இந்திய ரயில் ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் ஈரோடு ரயில் நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான ஆா்ப்பாட்டத்துக்கு சேலம் கோட்டத் தலைவா் அருண்குமாா் தலைமை வகித்தாா். துணைச் செயலாளா் சுப்ரமணியன் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், விருப்ப மாறுதல் கோரி 4 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்தவா்களுக்கு உடனடியாக பணியிட மாறுதல் அளிக்க வேண்டும். வந்தே பாரத் உள்பட பல புதிய ரயில்களை இயக்க போதுமான ரயில் ஓட்டுநா்களையும் சோ்த்து காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். பெண் ரயில் ஓட்டுநா்களுக்கான அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தரவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT