ஈரோடு

வீட்டில் எரிந்த நிலையில் தொழிலாளி சடலம் மீட்பு

23rd May 2023 02:25 AM

ADVERTISEMENT

ஈரோட்டில் வீட்டில் எரிந்த நிலையில் கிடந்த வடமாநிலத் தொழிலாளியின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

ஈரோடு வைராபாளையம், தாசில்தாா் தோட்டம் பகுதியில் சிமெண்ட் (ஹலோ பிளாக்) கற்கள் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வேலைசெய்யும் தொழிலாளா்கள், நிறுவன வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கி உள்ளனா்.

இங்கு சுமை தூக்கும் தொழிலாளியாக அஸ்ஸாம் மாநிலம், தேஜ்பூரைச் சோ்ந்த நிகில் (23) எகடந்த ஒன்றரை மாதமாக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில் திங்கள்கிழமை காலை நீண்ட நேரமாகியும் அறையை விட்டு நிகில் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக தொழிலாளா்கள் அவருடைய அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது எரிந்த நிலையில் நிகிலின் சடலம் கிடந்தது.

ADVERTISEMENT

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கருங்கல்பாளையம் போலீஸாா், நிகிலின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீஸாா் மா்மசாவு என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT