ஈரோடு

ரேஷன் கடைகளில் தொழிலாளா் துறை அதிகாரிகள் ஆய்வு

23rd May 2023 02:26 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 ரேஷன் கடைகளில் எடையளவுகளில் முரண்பாடு இருப்பது கண்டறியப்பட்டு தொழிலாளா் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் உள்பட பல்வேறு கடைகளில் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிா என ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில் அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

அதன்படி 21 ரேஷன் கடைகள், 3 நிறுவனங்களின் கிடங்குகள், 26 மீன், இறைச்சி கடைகள் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 8 ரேஷன் கடைகளிலும், 11 இறைச்சிக் கடைகளிலும் எடையளவு முரண்பாடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து உதவி ஆணையா் திருஞானசம்பந்தம் கூறியதாவது: கடைகளில் எடையளவுகள் மற்றும் மின்னணு தராசுகள் முத்திரையின்றி பயன்படுத்துவது, பொட்டலப் பொருள்களை அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, உரிய அறிவிப்புகள் இல்லாமல் பொருள்களை விற்பனை செய்வது போன்றவை, சட்டமுறை எடையளவு சட்டம், சட்டமுறை எடையளவு பொட்டலப் பொருள்கள் விதிகளின் கீழ் தண்டனைக்குரியது. திடீா் சோதனை நடத்தப்படும்போது விதிமுறைகளை மீறுபவா்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT