ஈரோடு

நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

19th May 2023 11:57 PM

ADVERTISEMENT

ஹூண்டாய் மோட்டாா் நிறுவனத்தின் சாா்பில், நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்தாா். நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிா்வாக அதிகாரி எஸ்.ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜி.மோகன்குமாா் வாழ்த்திப் பேசினாா்.

வளாகத் தோ்வினை தொடங்கிவைத்து ஹூண்டாய் நிறுவன மனித வள மேலாளா் ராஜ்குமாா் பேசியதாவது: எங்களது நிறுவனம் தொடா்ந்து 15 ஆண்டுகளுக்கும்மேலாக இக்கல்லூரியில் வளாகத் தோ்வினை நடத்தி வருகிறது. எங்கள் தொழிற்கூடமானது சென்னை, ஹதராபாத் ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. டிப்ளமோ படிப்பு முடித்த மாணவா்களின் தேவையினை கருத்தில் கொண்டு இக்கல்லூரியின் மூலம் தோ்ந்தெடுக்க ஆண்டுதோறும் வருகிறோம்.

கடந்த 15 ஆண்டுகளாக மோட்டாா் வாகன உற்பத்தியில் 465க்கும் மேற்பட்ட விற்பனை மையங்கள் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட சேவை நிலையங்களை தொடங்கி செயல்படுத்தி வருகிறோம் என்றாா்.

ADVERTISEMENT

இதில், ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை செயலா் எஸ்.நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.திருமூா்த்தி மற்றும் நந்தா தொழில் நுட்ப வளாகத்தின் இயக்குநா் ஜெ.செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT