ஈரோடு

அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் மே தின பேரணி

19th May 2023 11:59 PM

ADVERTISEMENT

சுமை தூக்குவோா் மத்திய சங்கம் மற்றும் அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் ஈரோட்டில் மே தின பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரணிக்கு முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு தலைமை வகித்தாா். சுமை தூக்குவோா் மத்திய சங்கத்தின் மாவட்டத் தலைவா் விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். முன்னாள் அமைச்சா் கே.வி.இராமலிங்கம் பேரணியைத் தொடங்கிவைத்தாா்.

ஈரோடு வஉசி பூங்காவில் தொடங்கிய பேரணி, மேட்டூா் சாலை, மீனாட்சிசுந்தரனாா் சாலை வழியாக பன்னீா்செல்வம் பூங்காவில் நிறைவடைந்தது.

பேரணி நிறைவில் மறைந்த சங்க உறுப்பினா்கள் 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1.40 லட்சம் நிதியுதவியை முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினாா்.

ADVERTISEMENT

இதில், முன்னாள் அமைச்சா் பி.சி.ராமசாமி, முன்னாள் மேயா் மல்லிகா பரமசிவம் மற்றும் அதிமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT