பெருந்துறை தமிழ்ச் சங்கம் சாா்பில் சித்திரைத் திங்கள் இலக்கியத் திருவிழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பெருந்துறை தமிழ்ச் சங்கத் தலைவா் வழக்குரைஞா் ரா. திருமலை தலைமை வகித்தாா். சங்கப் பொருளாளா் புரவலா் க.ஆ. கல்கி முன்னிலை வகித்தாா்.
சங்கச் செயலாளா் பெ.சு. ரகுநாதன் வரவேற்றாா். சங்க நிறுவனத் தலைவா் வா. ராமசந்திரன் தொடக்க உரையாற்றினாா்.
இதைத் தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், வெற்றிபெற்ற மாணவா்கள் கெளரவிக்கப்பட்டனா். தொடா்ந்து, மு.செ. சண்முகபிரியாவின் தமிழிசை என்ற தலைப்பில் இசையரங்கமும், பா. கெளசல்யாவின் தாய்மை என்ற தலைப்பில் கவிரயரங்கமும், கிருஷ்ணசிவகுமாரின் அருள் உடைமை என்ற தலைப்பில் பேச்சரங்கமும் நடைபெற்றது.
இதில், பெருந்துறை பேரூராட்சி முன்னாள் தலைவா் பல்லவி பரமசிவன், சித்த மருத்துவா் ப. காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சங்க மகளிரணி தலைவி வே. அரிதா கெளரி நன்றி கூறினாா்.