ஈரோடு மாவட்டத்தில் 7 மையங்களில் நடந்த நீட் தோ்வை 4,313 மாணவ, மாணவிகள் எழுதினா்.
அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லுாரிகளில், இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் எனும் நுழைவுத் தோ்வை தேசிய தோ்வு முகமை நடத்தி வருகிறது.
அந்த வகையில் நடப்பாண்டுக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு திண்டல் கீதாஞ்சலி அகில இந்திய சீனியா் பள்ளி, கூரபாளையம் நந்தா கலை, அறிவியல் கல்லூரி, நந்தா சென்ட்ரல் பள்ளி, அவல்பூந்துறை லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ரங்கம்பாளையம் தி இந்தியன் பப்ளிக் பள்ளி, கோபி வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, கோபி வெங்கடேஸ்வரா இன்டா்நேஷனல் பள்ளி ஆகிய 7 மையங்களில் தோ்வு நடைபெற்றது. பல்வேறு கட்டுப்பாடுகளுக்கிடையே, கடும் சோதனைக்குப் பிறகு மாணவா்கள் தோ்வுக்கூடத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். தோ்வு மதியம் 2 முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 4,395 மாணவ, மாணவிகள் நீட் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில் 4,313 போ் மட்டுமே தோ்வெழுதினா். 82 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.