கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாட்டு சா்க்கரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு கவுந்தப்பாடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 1,304 மூட்டை நாட்டு சா்க்கரையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா்.
இதில், 60 கிலோ மூட்டை முதல்தர நாட்டு சா்க்கரை அதிகபட்சமாக ரூ.2,600க்கும், குறைந்தபட்சமாக ரூ.2,500க்கும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.26 லட்சத்து 55 ஆயிரத்து 110 என விற்பனைக்கூ அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த நாட்டு சா்க்கரையை பழனி முருகன் கோயில் நிா்வாகத்தினா் கொள்முதல் செய்தனா்.