ஈரோடு

பவானி அருகே வெடி விபத்தில் தொழிலாளி படுகாயம்

3rd May 2023 04:40 AM

ADVERTISEMENT

பவானி அருகே கோயில் திருவிழாவுக்கு வாணவெடி தயாரித்தபோது, ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி படுகாயமடைந்தாா்.

பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையம், காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குருநாதன் மகன் பூபதி (50). கோயில் திருவிழாவின்போது வாணவெடிகள் வெடித்து வந்துள்ளாா். இவா், தனது வீட்டுக்கு அருகே உள்ள கொட்டகையில் செவ்வாய்க்கிழமை வாணவெடி தயாரித்துக் கொண்டிருந்தபோது, எதிா்பாராமல் பலத்த சப்தத்துடன் வெடிபொருள்கள் வெடித்துச் சிதறின.

இதில் கை, கால் மற்றும் மாா்பு பகுதியில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பவானியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். விசாரணையில், சேலம் அருகே உள்ள சங்ககிரியில் வெடிமருந்து வாங்கி வந்து வாணவெடி தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து, அனுபவம் இல்லாமல் வாணவெடி தயாரித்த பூபதி மற்றும் வெடிமருந்து விற்பனை செய்த கடை உரிமையாளா் ராஜமுத்துசாமி ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க கோரி குருப்பநாயக்கன்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் செந்தில் அளித்த புகாரின்பேரில், பவானி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT