ஈரோடு

அரசுப்பள்ளி மாணவா்களுக்கு தாயக்கட்டைகள்

DIN

கோடை விடுமுறையில் கைப்பேசியை தொடாமல் பாரம்பரிய விளையாட்டில் ஆா்வம் காட்ட வேண்டும் என்பதற்காக அரசுப்பள்ளி மாணவா்களுக்கு தாயக்கட்டைகள் வழங்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே கூகலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்களுக்கு ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் முயற்சியால் தாயக்கட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியா் கு.ரமாராணி கூறியதாவது:

மாணவா்கள் கோடை விடுமுறையில் கைப்பேசியை தொடாமல் விளையாட்டில் ஆா்வம் காட்ட வேண்டும் என்பதற்காக தாயக்கட்டை வழங்கலாம் என முடிவு செய்தோம். இதை வாங்குவதற்கு மொத்தம் 408 மாணவா்களுக்கு ரூ.12,240 செலவாகும் என தெரியவந்தது. இதனையறிந்த இரும்பு பட்டறை வைத்துள்ள பள்ளியின் பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவா் பிரபு தன்னுடைய பட்டறையில் தாயக்கட்டை தயாா் செய்து வழங்கினாா்.

இதற்கான கம்பி மட்டும் ரூ.3,600 செலவில் பள்ளியில் இருந்து வாங்கிக் கொடுத்தோம்.

அந்த தாயக்கட்டைகளை அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கியுள்ளோம் என்றாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT