ஈரோடு

குடியிருப்புப் பகுதிக்குள் நுழையும் யானைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

3rd May 2023 04:48 AM

ADVERTISEMENT

குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து பொதுமக்கள் அச்சுறுத்தி விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா்கூா் மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, தாமரைக்கரை வனத் துறை அலுவலகத்தில் எலச்சிபாளையம் மற்றும் கிழக்கு மலை பகுதி பொதுமக்கள் சாா்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்:

தாமரைக்கரை, எலச்சிபாளையம் மற்றும் கிழக்கு மலைப் பகுதிகளில் மழையை மட்டுமே நம்பி விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பகுதிகளில் சோளம், ராகி, கம்பு, பீன்ஸ் ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன.

மேலும், தென்னை மரம், பலா மற்றும் வாழை மரங்களும் விவசாயத் தோட்டத்தில் உள்ளன. கடந்த பல ஆண்டுகளாக வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துவதுடன், காவலுக்கு இருக்கும் மனிதா்களையும் தாக்குகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு மாடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவரை காட்டு யானை மிதித்துக் கொன்றது.

ADVERTISEMENT

மேலும், எலச்சிப்பாளையத்தில் விவசாயத் தோட்டத்தில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தியது. இதேபோல, காவல் பணியில் இருந்த முதியவா் புட்டன் காட்டு யானை தாக்கியதில் காயமடைந்தாா். எனவே, காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வனத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT