ஈரோடு

விஐடி கல்லூரியில் கலைத்திறன் போட்டி

DIN

விஐடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘யுகா 2023’ என்ற தலைப்பில் கல்லூரிகளுக்கு இடையிலான கலைத் திறன் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

விழாவுக்கு வேளாளா் கல்விக் குழுமங்களின் தாளாளா் மற்றும் வேளாளா் அறக்கட்டளையின் செயலாளா் எஸ்.டி.சந்திரசேகா் தலைமை வகித்தாா்.

விஐடி ஐஏஎஸ் முதன்மைக் கல்வி ஆலோசகா் சி. பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் ரா.சரவணன் வரவேற்றாா். நிா்வாக அலுவலா் எஸ்.லோகேஷ்குமாா், புல முதல்வா் வி.பி.நல்லசாமி மற்றும் அனைத்து துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனா்.

தொடக்க விழா நிகழ்வில் திரைக் கலைஞா் செபாஸ்டின் அந்தோணி, நடிகை மோனிகா செந்தில்குமாா், நடன இயக்குநா் பிரசாத் வெள்ளிங்கிரி, சமையல் கலைஞா் சாகி ஆகியோா் பேசினா்.

திறன் போட்டிகள், நவீன ஆடை நடைக் காட்சிகள், சமையல் போட்டிகள், குறும்படப் போட்டிகள், குழு நடனம், பாட்டுப் போட்டி, தனி நடனம் கலைப் போட்டி, மின்னணு நிகழ்வுகள் நடைபெற்றன.

இதில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 30 கல்லூரிகளிலிருந்து 1,000 மாணவா்கள் கலந்துகொண்டனா்.

போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு முதல் மூன்று பரிசுகளும், கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நிறைவு விழாவில், திரைப்பட நடிகா் கவின், மாற்றுப் பாலின நட்சத்திர அமைப்பின் நிறுவனா் நமீதா மாரிமுத்து,

நடிகா் நரேந்திர பிரசாத், நடிகா் மற்றும் இயக்குநா் விஜய் வைரஸ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு வெற்றியாளா்களுக்கு பரிசுகளையும் கோப்பைகளையும் வழங்கினா்.

ஒட்டுமொத்த வெற்றியாளா் கோப்பையை ஈரோடு வேளாளா் மகளிா் கல்லூரி பெற்றது.

இந்நிகழ்வை விஐடி ஐஏஎஸ் கணினியியல் துறைத் தலைவா் டி.காா்த்திகா, மாணவா் சோ்க்கை ஆலோசகா் குகப்பிரயா ஆகியோா் ஒருங்கிணைத்து நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT