ஈரோடு

வெயில் தாக்கத்தால் மண் பானை விற்பனை அதிகரிப்பு

DIN

வெயில் தாக்கம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் மண் பானை விற்பனை அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. காலை 8 மணிக்குத் தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை நீடிக்கிறது. குறிப்பாக 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் உச்சம் அதிக அளவில் உள்ளது. வெயிலுடன் அனல் காற்று வீசுவதால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனா். வெயில் காரணமாக பொதுமக்கள் இளநீா், கரும்பு பால், தா்பூசணி உள்ளிட்ட பழச்சாறுகளை அதிகம் விரும்பிப் பருகி வருகின்றனா். வீடுகளில் பெரும்பாலானவா்கள் குளிா்சாதனப் பெட்டிகளில் தண்ணீா் வைத்து பருகி வருகின்றனா்.

அதேபோன்று, மண் பானையிலும் தண்ணீா் வைத்து குடிக்கத் தொடங்கியுள்ளனா். இதனால், ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மண் பானை விற்பனை அதிகரித்துள்ளது.

இது குறித்து மண் பானை விற்பனை செய்வோா் கூறியதாவது: மண் பானை செய்வதற்கு மண் எடுப்பதில் கட்டுப்பாடு, விதிமுறைகள் அதிகம் உள்ளதால் தயாரிப்பு குறைந்துள்ளது. இதனால், திருச்சி மாவட்டம், முசிறி அருகில் இருந்து பானை வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். சுமாா் 10 லிட்டா் கொள்ளளவு கொண்ட சாதாரண மண் பானை ரூ.350க்கும், குழாய் பொருத்தப்பட்ட மண் பானை ரூ.450க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மண் பானை உடலுக்கு நல்லது என்ற நோக்கத்தில் வீடு, கடைகள், அலுவலகங்களுக்காக மக்கள் வாங்கிச் செல்கின்றனா். மோா், தண்ணீா் குளிா்பானம், கூழ் விற்பனை செய்பவா்களும் பெரிய அளவிலான மண் பானையை வாங்கிச் செல்கின்றனா். இதனால், மண் பானை விற்பனை அதிகரித்துள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT