ஈரோடு

குன்னூரில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி கூண்டில் சிக்கியது

DIN

 நீலகிரி மாவட்டம், குன்னூரில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி வனத் துறையினா் வைத்த கூண்டில் சிக்கியது.

நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சேலாஸ், நான்சச், கிளன்டேல் போன்ற பகுதிகளில் இரவில் நுழையும் கரடிகள் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், சேலாஸ் அருகே உள்ள பில்லிமலை தனியாா் தேயிலை எஸ்டேட் குடியிருப்புப் பகுதியில் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை கரடியைப் பிடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, அப்பகுதியில் கூண்டுகள் வைத்து வனத் துறையினா் கண்காணித்து வந்தனா்.

இந்நிலையில், கூண்டில் சிக்காமல் கடந்த 20 நாள்களாக போக்கு காட்டி வந்த கரடி வியாழக்கிழமை இரவு சிக்கியது.

இதையடுத்து, குன்னூா் வனச் சரகா் சசிகுமாா் தலைமையிலான வனக் காப்பாளா்கள் கூண்டில் சிக்கிய கரடியை வாகனம் மூலம் முதுமலை தெப்பக்காடு வனப் பகுதி கொண்டு சென்று வெள்ளிக்கிழமை அதிகாலை விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

அரச பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

SCROLL FOR NEXT