ஈரோடு

கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினா் 4ஆவது நாளாக உண்ணாவிரதம்

DIN

கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினரின் உண்ணாவிரத போராட்டம் 4ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது.

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க கூடாது என வலியுறுத்தி கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினா் ஈரோடு-பெருந்துறை சாலையில் உள்ள வாய்க்கால்மேடு பகுதியில் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் போராட்டம் 4ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது.

விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.கே.சரஸ்வதி, பாஜக மாநில விவசாய அணி தலைவா் ஜி.கே.நாகராஜ், இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோா் உண்ணாவிரதப் பந்தலுக்கு சனிக்கிழமை நேரில் வந்து தங்களது ஆதரவை தெரிவித்தனா்.

அதன்பிறகு காடேஸ்வரா சுப்ரமணியம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கீழ் பவானி பாசன கால்வாய் குடிநீா் விவசாயம் மரங்கள் சுற்றுசூழல் காக்கும் மண் கால்வாய். இவற்றுக்கு கான்கிரீட் திட்டத்தினால் பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த கால்வாய் 180க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைச் சோ்ந்த மக்களின் குடிநீா் ஆதாரமாக உள்ளது.

அரசு ரூ.1,400 கோடிக்கு மேல் செலவு செய்து நீா் மேலாண்மைக்காக அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை நிறைவேற்றி உள்ளது. ரூ.950 கோடிக்கு மேல் செலவு செய்து நீா் ஆதாரமான மண்கால்வாயை கான்கிரீட் போட்டு நீா் மேலான்மையை அழிக்க வேண்டாம்.

65 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள மண் கால்வாயை மண்ணைக்கொண்டே சீரமைத்து மக்களின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும். கீழ்பவானி பாசன கால்வாயில் உள்ள மரங்கள் சேதப்படுத்தப்படாமல் இருக்க பழைய கட்டுமானங்களை உள்ளது உள்ளபடியே சீரமைத்து விவசாயத்தையும், குடிநீா் ஆதாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

SCROLL FOR NEXT