ஈரோடு

மானிய விலையில் பழ மரக்கன்றுகள் பெற விண்ணப்பிக்கலாம்

10th Jun 2023 10:54 PM

ADVERTISEMENT

 

மானிய விலையில் பழ மரக்கன்றுகள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மரகதமணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை மூலம் அனைத்து வட்டாரங்களிலும் 42 கிராம ஊராட்சிகளில் நடப்பு ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த திட்டத்தின் கீழ், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பழங்களை தரும் மரக்கன்றுகளான மா, கொய்யா, எலுமிச்சை, சப்போட்டோ, மாதுளை போன்ற 5 ஒட்டுக்கன்றுகள் அடங்கிய ஒரு தொகுப்பு ரூ.150 மானியத்தில் விநியோகிக்கப்பட உள்ளது. விருப்பம் உள்ளவா்கள் ரூ.50 மட்டும் செலுத்தி பழ மரக்கன்றுகளின் தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம்.

ஈரோடு மாவட்டத்தில் 2023-2024ஆம் ஆண்டுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்டத்தின் கீழ் 12 ஆயிரத்து 600 பழ மரக்கன்றுகள் வழங்க ரூ.18 லட்சத்து 90 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பம் உள்ளவா்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களைத் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT