ஈரோடு

மதுவுக்கு அடிமையான மகனை அடித்துக் கொன்ற தந்தை கைது

10th Jun 2023 10:53 PM

ADVERTISEMENT

 

ஆப்பக்கூடல் அருகே மதுப் பழக்கத்துக்கு அடிமையான மகனை அடித்துக் கொலை செய்த தந்தையை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோபியை அடுத்த நஞ்சகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் ராஜாமணி (58). ஆட்டோ ஓட்டுநா். இவரது மகன் சிவானந்தம் (33), மதுவுக்கு அடிமையானதால் அடிக்கடி வீட்டிலிருக்கும் பொருள்களை விற்று மது அருந்தி வந்துள்ளாா். இந்நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்னா் தந்தை ராஜாமணியின் கைப்பேசியை விற்று, மது அருந்தியுள்ளாா்.

இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது ஆத்திரமடைந்த ராஜாமணி, ஊதாங்குழலால் சிவானந்தனைத் தாக்கி, ஆட்டோவில் ஏற்றிச்சென்று கீழ்வானி பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் இறக்கி விட்டுச் சென்றாா். அப்பகுதியினா் விசாரிக்கையில், சிவானந்தம் நடந்த விவரத்தைக் கூறிவிட்டு உயிரிழந்தாா். இது குறித்த தகவலின் பேரில் சடலத்தைக் கைப்பற்றிய ஆப்பக்கூடல் போலீஸாா், தந்தை ராஜாமணியைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT