ஈரோடு

பவானியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

10th Jun 2023 10:54 PM

ADVERTISEMENT

 

பவானியில் கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்ற புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்திய பல் மருத்துவ சங்கத்தின் பவானி - குமாரபாளையம் கிளை, பவானி - குமாரபாளையம் ரோட்டரி சங்கம், குமாரபாளையம் ஜேகேகே நடராஜா பல் மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய இப்பேரணி, புதிய பேருந்து நிலையம் அருகே தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்று சங்கமேஸ்வரா் கோயில் முன்பாக நிறைவடைந்தது.

பேரணிக்கு ஜேகேகே நடராஜா கல்வி நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் எஸ்.ஓம் சரவணா தலைமை வகித்தாா். பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், திமுக நகரச் செயலாளா் ப.சீ.நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தாா். பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் அமிா்தவா்ஷினி பேரணியைத் தொடங்கிவைத்தாா். பல் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியா் புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த பதாகைகள் ஏந்தியும், துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ADVERTISEMENT

ரோட்டரி சங்கத் தலைவா் பிரபாத் சி.மகேந்திரன், செயலாளா் சீனிவாசன், பொருளாளா் ஜீவா சித்தையன், பல் மருத்துவா் சங்கத் தலைவா் சசிக்குமாா், செயலாளா் செந்தில்குமாா், பொருளாளா் விமலாதித்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT