ஈரோடு

பெருந்துறை பேரூராட்சியில்குப்பையை தரம் பிரித்து வழங்கிய வீடுகளுக்குப் பரிசு

10th Jun 2023 10:55 PM

ADVERTISEMENT

 

பெருந்துறையில் குப்பையை முறையாக தரம் பிரித்து வழங்கிய வீட்டின் உரிமையாளா்களுக்கு பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் முதலாம் ஆண்டையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு,

பெருந்துறை பேரூராட்சித் தலைவா் ஓ.சி.வி.ராஜேந்திரன் தலைமை வகித்து குப்பையை தரம் பிரித்து வழங்கிய வீட்டின் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கினாா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, கோட்டைமேடு பகுதியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து ராஜ வீதியிலுள்ள குயவன் குட்டை பூங்காவில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னா், அங்கு மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில், பேரூராட்சித் துணைத் தலைவா் சண்முகம், வாா்டு உறுப்பினா்கள், அலுவலகப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT