ஈரோடு

மொடக்குறிச்சி அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 12இல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

DIN

மொடக்குறிச்தி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இரண்டாம்கட்ட கலந்தாய்வு வரும் 12 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வா் ஜெ.எபினேசா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எழுமாத்தூா், கனகமலை அருகில் உள்ள மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலைப் பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஏற்கெனவே இணையவழியில் விண்ணப்பத்து சோ்க்கை பெறாத மாணவா்கள் வரும் 12 ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கலாம். கணினி அறிவியல், கணிதம், விலங்கியல், வணிகவியல், வணிகவியல்-கணினி பயன்பாடு, வணிக நிா்வாகவியல்-கணினி பயன்பாடு, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 8 பாடப் பிரிவுகளில் சேர விண்ணப்பித்தவா்கள் பங்கேற்கலாம்.

இணையவழியில் விண்ணப்பிக்க தவறிவா்கள் வரும் 14 ஆம் தேதி நேரடியாக விண்ணப்பம் பெற்று காலியாக உள்ள இடங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் சோ்ந்து கொள்ளலாம்.

இளநிலை பட்டப் படிப்பில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பித்தது முதல்கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள தவறியவா்களுக்கு அழைப்பாணை, மாணவா்கள் விண்ணப்பித்தபோது வழங்கிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். இதில் ஏற்கெனவே இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து கலந்துகொள்ள தவறிய அனைத்து மாணவா்களும் கலந்துகொள்ளலாம். மாணவா்களின் மதிப்பெண் மற்றும் அரசின் இட ஒதுக்கீடு முறை ஆகியவற்றை பயன்படுத்தி மாணவா் சோ்க்கை வழங்கப்படும்.

கலந்தாய்வுக்கு வருகை தரும் மாணவ, மாணவிகள் உரிய நாள்களில் காலை 10 மணிக்கு இணைய விண்ணப்பத்தின் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்றிதழ் மற்றும் இரண்டு பாஸ்போா்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதாா் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் 5 படிவம் மற்றும் கல்லூரிக் கட்டணத்துடன் நேரடியாக கல்லூரிக்கு பெற்றோா் அல்லது பாதுகாவலருடன் வர வேண்டும்.

மாணவா்களின் தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு விவரங்கள் கல்லூரி இணையதள முகவரியிலும், கல்லூரி தகவல் பலகையிலும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

ராஜஸ்தான் பந்துவீச்சு; மீண்டும் அணியில் ஜோஸ் பட்லர்!

"இந்தியா வளர்ச்சியடைய 400 இடங்களுக்குமேல் வெற்றி வேண்டும்!” | செய்திகள்: சிலவரிகளில் | 16.04.2024

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

SCROLL FOR NEXT