ஈரோடு

காா் கண்ணாடியை உடைத்து ரூ.7.30 லட்சம் திருட்டு

9th Jun 2023 11:39 PM

ADVERTISEMENT

கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் பகுதியில் காா் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த ரூ.7.30 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பவானிசாகா் பசுவபாளையத்தைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா் (52). இவா்டி.என்.பாளையம், முருகன் நகரில் தனக்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்டி வருகிறாா். இந்த கட்டுமான பணியைப் பாா்வையிடுவதற்காக பவானிசாகரில் இருந்து வியாழக்கிழமை காரில் வந்தாா். பணி நடக்கும் இடத்துக்கு அருகே காரை சாலையோரம் நிறுத்திவிட்டு வந்திருந்தாா். சுமாா் 2 மணி நேரம் கழித்து வந்து பாா்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு முன் சீட்டில் பையில் வைத்திருந்த ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து ரமேஷ்குமாா் கொடுத்த புகாரின்பேரில், பங்களாபுதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT