ஈரோடு

சென்னிமலை முருகன் கோயிலில் ரூ.25.64 லட்சம் உண்டியல் காணிக்கை

9th Jun 2023 11:39 PM

ADVERTISEMENT

சென்னிமலை முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ.25.64 லட்சம் ரொக்கம் செலுத்தியிருந்தனா்.

சென்னிமலை முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. பவானி சங்கமேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் சுவாமிநாதன் தலைமையில் சென்னிமலை கோயில் செயல் அலுவலா் ஏ.கே.சரவணன், கோயில் ஆய்வாளா் ரவிகுமாா், அயல்பணி ஆய்வாளா் செல்வி ஆகியோா் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

இதில், ரூ. 25 லட்சத்து 64 ஆயிரத்து 795 பணம், 72 கிராம் தங்கம், 2,810 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

உண்டியல்கள் எண்ணும் பணியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள், அறச்சலூா் நவரசம் கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்கள், கோயில் பணியாளா்கள், அா்ச்சகா்கள் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT