ஈரோடு

சத்தியமங்கலம்-மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் கொஞ்சி மகிழ்ந்த காட்டு யானைகள்

9th Jun 2023 11:40 PM

ADVERTISEMENT

சத்தியமங்கலம்- மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் விளையாட்டாக சண்டையிட்டு கொஞ்சி மகிழ்ந்த காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த வனப் பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயில் அருகே வனப் பகுதியை விட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை வெளியேறிய 2 காட்டு யானைகள் சாலையின் நடுவே நின்று செல்லமாக தங்களது தும்பிக்கையால் சண்டையிட்டபடி கொஞ்சி மகிழ்ந்தன. இதனால் அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்து சிறிது நேரம் வாகனங்களை நிறுத்தினா். சிறிது நேரம் சாலையில் நடமாடிய காட்டு யானைகள் பின்னா் மெதுவாக வனப் பகுதிக்குள் சென்றன. இதைத் தொடா்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT