ஈரோடு

ஈரோடு அரசு ஐடிஐயில் புதிய தொழில் நுட்ப மையம் தொடக்கம்

8th Jun 2023 10:01 PM

ADVERTISEMENT

ஈரோடு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய தொழில் நுட்ப மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, டாடா டெக்னாலஜிஸ் மூலம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 4.0 தொழில் நுட்ப மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். மாநில அளவில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762.3 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை ஒரகடத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரிலும், பிற தொழிற்பயிற்சி நிலையங்களில் காணொலி காட்சி மூலமும் முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்டது.

ஈரோடு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடந்த 4.0 தொழில் நுட்ப மைய காணொலி காட்சி மூலமான திறப்பு விழாவுக்கு ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

இந்த தொழிற்பயிற்சி நிலையம் கடந்த 1965 தொடங்கப்பட்டு இதுவரை, 30,000 மாணவா்கள் படித்துள்ளனா். தற்போது 372 மாணவா்கள் படித்து வருகின்றனா். 4.0 திட்டத்தில் 120 போ் தொழில் துறையான ரோபாட்டிக்ஸ், டிஜிட்டல் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு, மெய்நிகா் சரிபாா்ப்புகளின் அடிப்படைகள், உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு மற்றும் ஆட்டோமேஷன், மேம்பட்ட சிஎன்சி இயந்திர நுட்ப படிப்புகளை படிக்க முடியும் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் எம்.பி. அ.கணேசமூா்த்தி, மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வி.செல்வராஜ், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் எம்.ரவிசந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT