ஈரோடு

ஈரோட்டில் ரூ.10 கட்டணத்தில் மருத்துவ சேவை தொடக்கம்

8th Jun 2023 10:03 PM

ADVERTISEMENT

ஆற்றல் அறக்கட்டளை சாா்பில் ஈரோடு, கள்ளுக்கடைமேடு ஜீவானந்தம் சாலையில் தொடங்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ மையத்தில் ரூ.10 கட்டணத்தில் மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.

இந்த மருத்துவ மையம் குறித்து ஆற்றல் அசோக்குமாா் கூறியதாவது:

ஆற்றல் அறக்கட்டளை சாா்பில் ஆற்றல் மருத்துவ மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ மையத்தில் மருத்துவ நிபுணா் மற்றும் செவிலியா் பொதுமக்களுக்கு சேவை அளிக்க நியமிக்கப்பட்டுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை ஆகிய 3 நாள்கள் காலை 10 மணி முதல் 12 மணி வரை மருத்துவ சேவை அளிக்கப்படும். திங்கள்கிழமை, புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய 3 நாள்களில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மருத்துவ சேவை அளிக்கப்படும்.

இங்கு காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட 18 வகையான நோய்களுக்கு தரமான மருத்துவ சேவையை பொதுமக்கள் பெறலாம். தேவைப்படும் நோயாளிகளுக்கு குறிப்பிட்ட மருந்துகள் இலவசமாகவும் வழங்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT